பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: சான்றாண்மை / Perfectness
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
துன்பம் தந்தவருக்கும் இனிமையானதை செய்யவில்லை என்றால் சான்றாண்மையால் என்ன பயன்?
அவசியம் செய்ய வேண்டியதை கட்டாயம் செய்வதே சான்றாண்மை. குண நலமுடன் அன்பு நாணம் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என ஐந்துடன் இருப்பதும், நல்லனவற்றை அழிக்காமல் அதை வளர்ப்பதும், தகுதி அற்றவர் இடத்திலும் தோல்வியை ஏற்பதும், துன்பம் தந்தவற்கும் இனியவை செய்வதும், சான்றாண்மையாகும். இப்படியானவர் ஊழி கடந்து போற்றப்படுவர். இவர்கள் சான்றாண்மை குறைந்தால் அகம் புறம் என இரு நிலையும் ஏற்காது.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.