பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: பெருமை / Greatness
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
பெருமைக்கு உரியவர்கள் செயல்படும் விதம் செயல்களை அருமையாக செய்யும் வழியை அறியும்படி இருக்கும்.
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.
The man endowed with greatness true,
Rare deeds in perfect wise will do.
(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).
perumai yudaiyavar aatruvaar aatrin
arumai udaiya seyal
எண்ணமற்ற வெறுமையுடன் இருப்பதே மனிதனுக்கு பெருமை. உயிர்களிடத்தில் இருக்கும் வேறுபட்ட செயல்பாடுகளே பெருமை. மேலாக செயல்பட வாய்ப்பு இருந்தும் அப்படி இல்லாதவர் கீழானவரே. தன்னை தானே கேட்டு நடப்பவரே கற்புடை பெண் போன்றவர், தேவையற்றதை மறைத்து ஆற்றக்கூடியதை ஆற்றி பெருமிதம் இல்லாமல் பணிவுடன் இருப்பதே பெருமை.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.