திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: மானம் / Honour   

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.



மலை போன்றவர் என்றாலும் குறைந்து தாழ்ச்சி அடைவார் குற்றமானதை குறைந்தளவு செய்தால்.



மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.



நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.



குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.


If meanness, slight as 'abrus' grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought.


Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.



kundrin anaiyaarum kundruvar kundruva
kundri anaiya seyin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அதிகபட்ச தேவை தீர்க்கும் என்றாலும் அதை குறுக்கு வழியில் அடைய நினைப்பதே மானம் என்பாதல் சிறப்பற்ற ஒன்றை செய்யமாட்டர் சிறப்புடன் வாழ நினைப்பவர். தகுதி வளர்ந்தவர் உயர்ந்த நிலையில் பணிவாகவும் தாழ்ச்சி ஏற்படும் பொழுது தன்னை உயர்வாகவும் தற்காத்துக் கொள்வார். உதிர்ந்த மயிர் சிதையாது என உணர்ந்து மனித கூட்டத்திற்கு அற்பாற்பட்டு சிந்தித்து நிலையாக நிறுத்த முடியாத உயிருக்கு மதிப்பளித்து மனித குலத்திற்கே வழிகாட்டியாக வாழ்வதே மானம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.