திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: குடிமை / Nobility   

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.



நற்குடியில் பிறந்தவரைத் தவிர மற்றவருக்கு இல்லை இயல்பாகவே திடமாக இருப்பதும் நாணுவதும் சேர்ந்து.



நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.



சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.



நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.


Save in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined.


Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.



iRpiRandhaar kaN-alladhu illai iyalpaakach
cheppamum naaNum orungu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

திடத்தனம்மையும் நாணுதலும் நற்குடிக்கு அழகு. சுய காட்டுப்படும், உண்மையும், உற்சாகமும், கொடுக்கும் பண்பும் நற்குடியின் இயல்பு. எதன் பொருட்டும் குற்றம் செய்யாத நற்குடி பிறந்தவரின் சிறிய தவறும் வானத்து மதியாய் வெளிப்படும். காலில் ஒட்டிய மண் நிலத்தின் தன்மை உணர்த்துவது போல் நற்குடி பிறந்தவர் வாய்ச்சொல் உணர்த்தும். பணிவே நற்குடியாக மாற்றும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.