பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: கள்ளுண்ணாமை / Not Drinking Palm-Wine
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
நாணம் என்ற நல்லவள் வெளியேறுவாள் கள்ளென்னும் நன்மை தராத பெருங்குற்றம் செய்தால்.
நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.
போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.
Shame, goodly maid, will turn her back for aye on them
Who sin the drunkard's grievous sin, that all condemn.
The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.
naaN-ennum nallaaL puRangotukkum kaLLennum
paeNaap perungutrath thaarkku
கள் மீது காதல் கொண்டவர் உறவை இழந்து சுய ஆற்றலையும் இழந்து முன் உதாரணமாக வாழும் சான்றோன் என்ற தகுதியையும் இழப்பார். நாணம் என்ற நற்பண்பு கெடுங்கும் கள் தன்னை மறக்கச் செய்யும். மதுக்கு அடிமையாக உள்ளவருக்கு போதிப்பது நீருக்குள் தீபந்தம் ஏற்றுவது போன்றது. போதை இல்லாதபொழுது போதையுள்ளவர்களின் செயலைப் பார்த்து திருந்த வேண்டும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.