திருவள்ளுவரின் திருக்குறள்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.



உள்முகமாக இருந்து செய்யும் செயல்களில் நல்லது முக மலர்ச்சியுடன் இனிய வார்த்தைகள் சொல்லுவது.



முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.



முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.



முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.


A pleasant word with beaming smile's preferred,
Even to gifts with liberal heart conferred


Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind



agan-amarndhu eedhalin nandrae mukanamarndhu
insolan aakap peRin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செம்பொருள் கண்டவர் வார்த்தைகள் கண்கள் ஈரம் வழிய செய்யும், உள்ளத்தை பொருத்தே கொடுக்கும் அளவு இருக்கும் முக மலர்ச்சி பொருத்தே வார்த்தை பொருள்படும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.