திருவள்ளுவரின் திருக்குறள்

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.



பொதுநலத்தாரின் புலன் இன்பத்தை விரும்பமாட்டார்கள் மனதின் நலத்தால் நல்லறிவு பெற்றவர்கள்.



இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.



இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.



இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.


From contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee.


Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).



podhunhalaththaar punnalam thoayaar madhinhalaththin
maaNda aRivi navar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அன்புக்கு இணங்காமல் பொருளுக்கு இணங்கும் பெண்களின் ஆசை வார்த்தை அவமானத்தை தேடித்தரும். பிணத்துடன் உறவாடுவது போன்றது அவர்களுடன் உறவாடுவது. நல்லறிவு பெற்றவர்கள் பொதுமகளிரை நாடுவது இல்லை. வரைமுறை அற்ற பெண்கள் அறிவற்றவற்றவர்கள் மூழ்கும் நரகம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.