திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: உட்பகை / Enmity within   

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.



உட்பகை எள்ளளவே சிறுமையான தானலும் உள்ளதற்கு எல்லாம் கேடு உண்டாக்கும்.



எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.



எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.



எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்.


Though slight as shred of 'seasame' seed it be,
Destruction lurks in hidden enmity.


Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.



etpaka vanna siRumaiththae aayinum
utpakai uLLadhaanG kaedu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இன்பம் தராத உறவுகளும் உண்டு அவர்கள் வாள் கொண்டு அழிக்கும் பகைவரை விட கொடுமையானவர்கள். உட்பகை உள்ளவருடன் வாழ்தல் சுடாத பானையில் உலை வைத்தல் போன்றது. உள்ளத்தின் இயல்பை அழிக்கும் உட்பகை குடுப்பத்திற்கு கேடு. உட்பகை கொண்டவருடன் வாழ்வதும் கொடிய பாம்புடன் இருட்டில் இருப்பதும் ஒன்றே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.