பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: பகைத்திறந்தெரிதல் / Knowing the Quality of Hate
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
இளசாக இருக்கும் முள் மரத்தை அழிக்க வேண்டும், தவறினால் தேவையற்றதை விலக்கும் பொழுது இயலாது போகும். (பகையை வளரவிடக்கூடாது.)
முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.
நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.
முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.
Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, 'twill pierce the hand that plucks it thence.
A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.
iLaidhaaka muLmaram kolka kaLaiyunhar
kaikollum kaazhththa idaththu
பண்பற்ற பகை விரும்ப வேண்டாம். கொலைக் கருவி கொண்டவனின் பகைவிட சொல் கொண்டவன் பகை வலிமையானது. எல்லாரையும் பகைத்துக் கொள்பவனே ஏழை. பகைவரை நட்பாக கருதும் பண்பே முதன்மையானது. தெளிவற்றவன் நட்பு நல்லதல்ல. தன்னை காத்துக் கொள்ளவதும் பகையுணர்வை வளரவிடாமல் அழிப்பதும் அவசியமானது. குற்றம் செய்பவரின் செறுக்கை அழிக்காதவர் உண்மையாக வாழ்பவர் இல்லை.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.