திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பகைமாட்சி / The Might of Hatred   

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.



வலிமையானவர்கள் மேல் நெஞ்சை நிமிர்த்த விரும்பு. விரும்பாதே மென்மையானவர்கள் மேல் வரும் பகையை.



தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.



பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.



மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.


With stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray.


Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.



valiyaarkku maaRetral Ompuka Ompaa
meliyaarmael maega pakai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வலிமையை எதிர்த்து மென்மையை தவிர்ப்பது பகைக்கு சிறப்பு. அன்பும், நல்ல துணையும், சுய சிந்தனையும் இல்லாதவன் பகை வீண். அச்சமும், அமைதியும், கொடுக்கும் பண்பும் இல்லாதவன் பகைவர்க்கு எளிமையானவன். அறியாமலேயே வெறுப்பும், பேராசையும் உள்ளவனை பகையாக கொள்ள வேண்டும். கூடி இருந்தே அழிக்க நினைப்பவனை பகைமை பாராட்ட வேண்டும். பகை உணர்வு உள்ளவனுக்கு இன்பம் அறிவற்று அஞ்சும் ஒருவரே. கல்லாதவன் யாருடனும் கூடி இருக்கும் தகுதியற்றவன்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.