திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இகல் / Hostility   

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.



பகையுணர்வுக்கு எதிராக வாழும் ஒழுக்தில் வல்லவரை, யார் வெல்லும் தன்மை கொண்டவர் ?.



இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.



தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?.



மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.


If men from enmity can keep their spirits free,
Who over them shall gain the victory?.


Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?.



ikaledhir saaindhozhuka vallaarai yaarae
mikalookkum thanmai yavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இகழ்ச்சி என்பது இயல்பை மறுப்பது. நடுநிலைமையுடன் விலகிடினும் இகழ்வை கருத்தில் கொண்டு துன்பம் செய்தல்கூடாது. இகல் என்ற பகை பாராட்டும் நோய் அழித்தால் சிறப்பான மாற்றம் வரும் இன்பம் வளர்ந்து துன்பம் அழியும். பகை உணர்வு அற்றவரை யாரும் வெல்ல முடியாது, எதிரிகள் வாழ்வின் ஏற்றத்திற்கு வேண்டும் என்பவர் எளிதில் அழிவார். உண்மை அறியாதவன் பெருமை கொள்வதைப் போன்றே தீய குணம் உள்ளவர் பகையுணர்வு அடைவார். நன்மை அடைபவர் இகல் என்ற பகை உணர்வு இல்லாதவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.