திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புல்லறிவாண்மை / Ignorance   

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.



கூர்ந்த மதியின்மை எனப்படுவது என்ன என்றால் நுட்ப அறிவு உடையவன் நான் என்ற மதி மயக்கமே.



புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.



அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.



ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.


What is stupidity? The arrogance that cries,
'Behold, we claim the glory of the wise.'


What is called want of wisdom is the vanity which says, "We are wise".



veNmai enappatuva thiyaadhenin oNmai
udaiyamyaam ennum serukku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறிவற்ற தன்மையே இல்லாமை எனப்படும். அறிவற்றவரும் கொடுக்கும் தன்மை பெறுபவரின் தவத்தன்மையே. அறிவற்றவரே தன்னை நுட்ப அறிவு உள்ளவராக எண்ணுவார். தவறால் ஆன குறையை மறைப்பதே பெரிய குறை. கிழ்படிதல் மற்றும் சுய சிந்தனை இல்லாதவர் உயிர் அவருக்கான நோய். உணராதவன் உளரல் அவனது அறியாமையை காட்டும். உள்ளதை இல்லை என்பவன் பேய்க்கு ஒப்பானவன்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.