பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: தீ நட்பு / Evil Friendship
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
நடக்கும் செயலை கெடுப்பவர் நட்பை சொல்லிக் கொண்டு இருக்காமல் விட்டோழிக்க வேண்டும்.
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.
தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்.
Those men who make a grievous toil of what they do
On your behalf, their friendship silently eschew.
Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.
ollum karumam udatru pavarkaeNmai
sollaataar soara vidal
பண்பில்லாதவர் உறவை, தனிமையில் பாராட்டி கூட்டத்தில் பழிப்பவர் உறவை குறைத்துக்கொள்ள வேண்டும். தேவை கருதி பழகி விலகுபவர் திருடனுக்கு சமமானவர். போலியான நட்பரைவிட உண்மையான பகைவர் சிறந்தவர்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.