திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: தீ நட்பு / Evil Friendship   

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.



சிந்தை தெளிவில்லாதவரிடம் நெருக்கமான நட்புக் கொள்வதை விட ஆய்ந்து அறிபவரிடம் பகைமை பாராட்டுவது நிறைந்த நன்மை தரும்.



அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.



அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.



அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.


Better ten million times incur the wise man's hate,
Than form with foolish men a friendship intimate.


The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.



paedhai perungezheei natpin aRivutaiyaar
Edhinmai koati uRum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பண்பில்லாதவர் உறவை, தனிமையில் பாராட்டி கூட்டத்தில் பழிப்பவர் உறவை குறைத்துக்கொள்ள வேண்டும். தேவை கருதி பழகி விலகுபவர் திருடனுக்கு சமமானவர். போலியான நட்பரைவிட உண்மையான பகைவர் சிறந்தவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.