பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: பழைமை / Familiarity
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
விரும்பத் தகாதவரும் விரும்புவார், பழைமையான நண்பரின் பண்பை அறிந்தும் விலகாத ஒருவரை.
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.
பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.
Ill-wishers even wish them well, who guard.
For ancient friends, their wonted kind regard.
Even enemies will love those who have never changed in their affection to their long-standing friends.
vizhaiyaar vizhaiyap padupa pazhaiyaarkaN
paNpin thalaippiriyaa thaar
நாட்களைப் போல் மாறாமல் நிலையாக இருப்பதே பழைமை. உரிமையும் உடன்பாடும் பழைமையால் வரும். துறவியும் பழைமை பாராட்டும் நட்பை துறக்கமாட்டார்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.