பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: நட்பாராய்தல் / Investigation in forming Friendships
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
ஒருவருக்கு நற்பயன் என்பது, மடத்தனமானவரின் நட்பை விலக்கி விடுவதே.
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.
அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.
ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.
'Tis gain to any man, the sages say,
Friendship of fools to put away.
It is indead a gain for one to renounce the friendship of fools.
oodhiyam enpadhu oruvaRkup paedhaiyaar
kaeNmai oreei vidal
தேடாத உறவால் கேடு இல்லை. உறவு பாராட்டினால் தன்னிலை மாறும் எனவே ஆராய்ந்து பழிக்கு அஞ்சும், அழச்சொல்லும், தவறை திருத்தும் நட்பை பாராட்ட வேண்டும். துன்பமான நேரத்தில் உண்மையான நட்பை அறியலாம். சிறுமையானவர் நட்பை இழப்பதும் ஊதியமே. மாசு இல்லாதவர் நட்பை பெற்று, ஒத்திசைவு இல்லாதார் நட்பை விலக்க வேண்டும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.