பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: நட்பு / Friendship
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
படிக்கும் பொழுதெல்லாம் வளர்க்கும் நூலின் தன்மைப்போல் பழகும் பொழுதெல்லாம் வளர்க்கும் பண்புடையவர்களின் தொடர்பு.
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.
Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
So the heart by use grows fonder, Bound in friendship with the good.
Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.
navildhoRum noolnhayam poalum payildhoRum
paNpudai yaaLar thodarpu
செயல்களில் அரியது நட்புடன் இருப்பது. நிறைவானவர் நட்பு வளர்மதியாக வளர்ந்து நிறைவற்றவர் நட்பு தேய்ந்துவிடும். படிக்க இனிமையான புத்தகம் போன்றது இனிமையானவர் நட்பு. கூடி மகிழமட்டும் இல்லாமல் குறைகளை எடுத்துக் காட்டி திருத்தவும் நட்பு அவசியம். உதவி கேட்காமலேயே தானாக முன்வந்து செயல்படும் நட்பே நட்பிற்கு இலக்கணம். தன்னை உயர்வாக காட்டும் நட்பு நிலைக்காது.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.