திருவள்ளுவரின் திருக்குறள்

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.



கவனமாய் விரிந்த விழிகளின் இமைகள் தன்மீது எறிந்த வேல் கண்டும் ஒட்டாது திடமான மனிதற்கு.



பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.



பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.



களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.


To hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spear.


Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?.



vizhiththakaN vaelkoNa teRiya azhiththimaippin
ottandroa van-ka Navarkku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

என் முன் நிற்காதே தோல்வி அடைவாய் என்ற செருக்குடைய படைவீரன் காட்டு முயலுக்கு அம்பு ஏய்துவதிலும் கொல்லமுடிய யானை மீது ஏய்தவே முற்படுவான். மரணமும் மதிப்பு மிகுந்தது என உணர்ந்தவனே எல்லாரலும் மதிக்கப்படுவான்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.