பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: அரண் / The Fortification
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
எவ்வளவு சிறப்புப் பெற்றதாக இருப்பினும் செயல் திறன் இல்லாதவர் இடத்தில் பயன் அற்றதாகும் அரண்.
ஆள்பவருக்கும் அஞ்சுபவருக்கும் அவசியமான அரண். நன்நீரும் வளமான மண்ணும் நிழல்நிறை காடும் மலையும் அடக்கியதாக இருக்கும். பகைவரை தடுக்கவும் உள்ளவரை பாதுகாக்கவும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும். எவ்வளவு சிறப்பு பெற்ற அரணாக இருப்பினும் செயல்திறன் அற்ற ஆட்சியாளர் அமைந்தால் அரண் பயனற்றதாகிவிடும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.