திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நாடு / The Land   

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.



தீர்க்க முடியா பசியும், அழிக்க முடியா நோயும், தணிக்க முடியா பகையும் சேர்த்துக் கொள்ளாது இருப்பது நாடு.



மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.



மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.



பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.


That is a 'land' whose peaceful annals know,
Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.


kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.



uRupasiyum Ovaap piNiyum seRupakaiyum
saeraa thiyalvadhu naadu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தேவையற்றது விளையாமல் தகுதியவர்கள் கூடி இருப்பதும், பசி, பிணி, பகை, இல்லாமல் இருப்பதும் நாடு. ஊற்று நீரும், மழை நீரும், மலை அருவியும், அரனும் நாட்டிற்கு உறுப்புகள். எல்லாம் இருந்தும் நல்ல ஆட்சியாளர் இல்லை என்றால் பயன் இருக்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.