பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: அவையறிதல் / The Knowledge of the Council Chamber
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
குறுக்கிடும் இடத்தை தேர்வுச் செய்து நன்றாக உணர்ந்து சொல்லவேண்டும், சொல்லின் ஒட்டத்தை அறிந்து நன்மை அடைபவர்.
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.
மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.
Good men to whom the arts of eloquence are known,
Should seek occasion meet, and say what well they've made their own.
Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).
idaidherindhu nankuNarndhu solluka sollin
nadaidherindha nanmai yavar
அளவை அறிந்து பேச வேண்டும், ஆர்வம் குறையாமல் அறிபவர் தரம் புரிந்து பேச ஒத்த உணர்வு பெற்று பயிர் வளர்க்க உதவும் நீராய் மாறும். ஆனால், தகுதியற்றவர் முன் பேசினால் சாக்கடையில் கொட்டிய அமிழ்தாகும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.