திருவள்ளுவரின் திருக்குறள்

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.



வேண்டியதை சொல்லி, செயல்பட தேவையற்றதை எதன்பொருட்டு கேட்டாலும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.



அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.



ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.



விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.


Speak pleasant things, but never utter idle word;
Not though by monarch's ears with pleasure heard.


Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).



vaetpana solli vinaiyila eGnGnaandrum
kaetpinum sollaa vidal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நெருப்பிடம் உள்ள நெருக்கமே ஆட்சிளார்களிடம் இருக்கவேண்டும். ஆட்சியாளர்கள் விரும்புவதை நமக்கு உரிமையாக்க வேண்டாம். அவரின் உறவை எண்ணி நெருக்கம் காட்ட வேண்டாம், இளையவர் என்று சொந்தம் பாராட்ட வேண்டாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.