பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: மன்னரைச் சேர்ந்தொழுதல் / Conduct in the Presence of the King
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.
ஆட்சியாளர் அடைய விரும்புவதை குறுக்கிட்டு அடையாமல் விலகினால் ஆட்சியாளரால் நிலைத்த உயர்வு கிடைக்கும்.
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.
To those who prize not state that kings are wont to prize,
The king himself abundant wealth supplies.
For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.
mannar vizhaipa vizhaiyaamai mannaraal
manniya aakkanh tharum
நெருப்பிடம் உள்ள நெருக்கமே ஆட்சிளார்களிடம் இருக்கவேண்டும். ஆட்சியாளர்கள் விரும்புவதை நமக்கு உரிமையாக்க வேண்டாம். அவரின் உறவை எண்ணி நெருக்கம் காட்ட வேண்டாம், இளையவர் என்று சொந்தம் பாராட்ட வேண்டாம்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.