திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: வினைசெயல்வகை / Modes of Action
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.