திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: வினைத்திட்பம் / Power in Action
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.