பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: சொல்வன்மை / Power of Speech
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
அளவிற்கு அதிகமான பல சொற்களை சொல்ல ஆசைப்படுவார்கள் இடத்திற்கு தேவையான குறைவற்ற சில சொற்களில் தேர்ச்சி பெறாதவர்கள்.
குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.
குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.
Who have not skill ten faultless words to utter plain,
Their tongues will itch with thousand words man's ears to pain.
They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.
palasollak kaamuRuvar mandramaa satra
silasollal thaetraa thavar
நலம் அடைந்தவர் என்றால் சொல் வளம் பெற்றவர். சொல் வெல்லவும் விழ்த்தவும் செய்யும் என்பதால் திறனறிந்த சொல்ல வேண்டும். பல சொல்ல விரும்பாமல் மறுக்க முடியாதபடி சொல்லை சொல்ல வேண்டும். நல்வாசம் வீசும் செடியில் பூத்தும் வாசம் தராத மலர் பொன்றவர் தான் அறிந்ததை அடுத்தவர் உணரச் செய்யாதவர்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.