திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அமைச்சு / The Office of Minister of state   

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.



மடத்தனமான ஆலோகர் அருகில் இருப்பது எதிரிகள் எழுபது கோடி இருப்பதுபோல் ஆகிவிடும்.



தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.



தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.



தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.


A minister who by king's side plots evil things
Worse woes than countless foemen brings.


Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.



pazhudheNNum mandhiriyin pakkadhadhuL thevvoar
ezhupadhu koadi uRum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கருவி காலம் செய்யவேண்டியது செய்யவேண்டிய விதம் என தீர்மானிப்பதே அமைச்சு என்ற நிர்வாகம். நற்பண்புகளுடன் தேவையை அறிந்து அதை ஊக்கிவித்து தீமை அழித்து யாவரையும் காக்கும்படி இருக்க வேண்டும். முட்டாள்களின் ஆலோசனை அழிவைத்தரும் என உணர்ந்து முறையான முடிவை எடுக்கவேண்டும். .


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.