திருவள்ளுவரின் திருக்குறள்

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.



அடுத்தடுத்து தொடர்ந்து வந்தாலும் அழிவற்றவர் பெற்ற துன்பம் துன்பப்பட்டு போகும்.



விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.



ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.



துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.


When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart.


The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).



atukki varinum azhivilaan utra
idukkaN idukkat padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இடர் கண்டு அழியாமல் இருக்க நகைப்புன் அதைப்பார்த்து உள்ளத்தின் திறத்தை வளர்த்து இடர்பாட்டிற்கே இடர்பாடு தரவேண்டும். இடர்பாடுகள் நம்மை வளர்க்கும் அற்புத சுழல் என உணர்ந்தவர் இன்பத்தில் நிலைக்கிறார். இன்பம் கருதி செயல்படமால் இடர்பாடுகளும் இன்பத்திற்கே என்பதே சிறப்பு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.