திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஆள்வினையுடைமை / Manly Effort   

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.



தலைவிதியையும் தனக்கு சாதகமாக பார்ப்பார் சோர்வின்றி தளராது பெருமுயற்சி செய்பவர்.


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செயல்பட ஆர்வமாக இருப்பதே எல்லா வெற்றிக்கும் ஆதாரம். எனவே முழுமை அடையும் வரை செயல்பட துணிய வேண்டும். ஐம்பொறியில் சில இல்லாது போனாலும் பழியாகாது ஆள்வினை இல்லாது இருப்பதே பழி. வாழ்வாங்கு வாழ்பவரை கடந்து வாழ உடல் வருத்த உழைத்தால் முடியும். தலைவிதியையும் மாற்றும் வல்லதை உழைப்பிற்கு உண்டு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.