பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல் / The Wealth of Children
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
அடையவேண்டியவற்றுள் நான் அறிவது இல்லை அறிவுடைய குழந்தைகள் தவிர வேறொன்று.
ஒருவர் தனது வாழ்நாளில் பெற வேண்டியது அறிவில் சிறந்த குழந்தைகளே. அது பிறவித் துன்பத்தை துடைக்க வல்லது. நமது பிள்ளை என்றாலும் அதனதன் வினைப்பயன் அதனதனை தொடரும். குழந்தைகள் உண்ட மிச்சம் போன்ற அமிழ்து இல்லை, அவர்களின் குரல் போன்ற இனிமை எந்த இசையிலும் இல்லை. தன் குழைந்தைகளுக்கு நல்வாய்ப்பு எற்படுத்த வேண்டியது தந்தையின் கடமை. தாயும் தன் மகனை சான்றோன் என்பதில் மகிழ்சியடைவாள். குழந்தைகளும் தன் தந்தைக்கு நற்பெயர் பொற்று தரவேண்டும்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.