திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஊக்கமுடைமை / Energy

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.



பயனுள்ள செயல்கள் வீனாகாமல் நடக்கும், தளராத ஊக்கத்தை உரிமையாக அடைந்த ஒருவர் இடத்தில்.



சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.



தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.



உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.


The man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell.


Wealth will find its own way to the man of unfailing energy.



aakkam adharvinaaich sellum asaivilaa
ookka mudaiyaa nuzhai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உரிமையாக அடையவேண்டிய உடைமைப் பொருள் ஊக்கம், அது இல்லை என்றால் அடைந்த எல்லாம் மாறும். ஊக்கம் உள்ளவர்கள் தோல்வி கடந்து வெற்ற அடைவார். ஊக்கமே வாழ்வின் நிலைப்பாட்டை தீர்மாணிக்கும். தந்தம் உள்ள யானையை எதிர்க்கும் புலி ஊக்கத்திற்கு நல்ல உவமை. ஊக்கம் இல்லாதவர் இயந்திர மனிதனே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.