திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: ஒற்றாடல் / Detectives
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.