திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கண்ணோட்டம் / Benignity   

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.



கண்ணிற்கு அணியும் சாதனம் பார்த்தறிதல்(பக்குவமடைதல்). அது இல்லை என்றால் புண் என்றே உணரப்படும்.



ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.



ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.



கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.


Benignity is eyes' adorning grace;
Without it eyes are wounds disfiguring face.


Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.



kaNNiRku aNikalam kaNNoattam aqdhindrael
puNNendru uNarap padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பார்த்து அறியும் திறத்தால் உண்மை நிலைக்கிறது. அவர்களால் உலகம் வளம் அடைகிறது. அத்திறன் இல்லாதவர்கள் உலகின் பாராமானவர்கள், பாடலுக்கு இசை போன்றது கண்ணுக்கு பார்த்தறிதல், காரியங்கள் சிதையாமல் உள்ளபடி பாரப்பவர் வல்லமையானவர்கள் அவர்கள் நஞ்சையும் நன்மை பொருட்டு அருந்த தயங்கமாட்டர்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.