திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: செங்கோன்மை / The Right Sceptre   

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.



ராணுவ பலம் வெற்றியைத் தராது ஆட்சியாளரின் ஆணைகள் கேடு இல்லாமல் இருப்பதே வெற்றி.



ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.



ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.



ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.


Not lance gives kings the victory,
But sceptre swayed with equity.


It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.



vaelandru vendri tharuvadhu mannavan
koaladhoounG koataa thenin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உடன்படுகிறதா என்று பாராமல் இயற்கையை புரிந்துக் கொண்டு யாவரும் சிறக்க வழிமுறை செய்வதே நல்லாட்சிமுறை இப்படி செய்பவர் வான்நோக்கிய வளத்தை தன் குடிமக்களுக்கு வழுங்குவார். ஆட்சியாளர்களின் சட்டமே இறுதியாக இருப்பதால் ராணுவ பலத்தை விட நற்குணமே பலமாக அமையும். கொடியவர்களை அழிந்தல் களை எடுப்பதைப் போன்றது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.