பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: தெரிந்துவினையாடல் / Selection and Employment
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
செய்யத் தகுந்ததா என்று அறிந்த பின்பே அதற்க்கு உரியவரை செய்யத் தூண்ட வேண்டும்.
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.
ஒரு செயலில் ஈ.டுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.
As each man's special aptitude is known,
Bid each man make that special work his own.
Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.
vinaikkurimai naatiya pindrai avanai
adhaRkuriya naakach cheyal
நாடும் தன்மைக்கு ஏற்ப நன்மை தீமை உண்டாகும். சேர்த்து வாரி அதிகரிக்க தெரிந்தவர் செய்வதே செயல். அன்பு, அறிவு, புரிதல், அவாயின்மை என நான்கும் உள்ளவரே தெளிவானவர். செயல்பட வாய்ப்பு இருந்தும் செயல்பட முடியாதவர்கள் பலர். செயல்பட தகுதியானவரை நாடி தகுந்த காலத்தில் செய்வதே சரி. தகுதியற்றவரை தேர்தெடுப்பதால் மரியாதை குறையும். தகுதியானவரை மதிப்புடன் நடத்துவதே ஆட்சியாளர்களின் கடமை.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.