திருவள்ளுவரின் திருக்குறள்

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.



ஆசையால் உந்தப்பட்டு அறிவற்றவரை முன்னேற்ற நினைப்பது எல்லா சிறுமைத் தனத்தையும் தரும்.



அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.



அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.



அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.


By fond affection led who trusts in men of unwise soul,
Yields all his being up to folly's blind control.


To choose ignorant men, through partiality, is the height of folly.



kaadhanmai kandhaa aRivaRiyaarth thaeRudhal
paedhaimai ellaanh tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அகம் சார்ந்த அறமும், புறம் சார்ந்த பொருளும், நிலையான இன்பமும். உயரின் தன்மையும் அச்சமும் என நானகையும் தெரிந்து தேறுவதையே தெளிவு எனலாம். நல்ல சுழலில் பிறந்தாலும் குற்றம் அற்றவனாக வாழ்வதே தெளிவு. அரியன கற்பதைக் காட்டிலும் தன் குற்றத்தை நீக்குவதை தெளிவு. குணம் குற்றம் சீர்தூக்கிப் பார்த்து மிகையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். தேராதவரின் பின் சென்றால் தாராத துன்பம் விளையும். தேறியவரின் ஐயமும் தேராதவரின் தெளிவும் தீராத துன்பம் தரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.