திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வலியறிதல் / The Knowledge of Power   

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.



மயில் இறகை போன்றதாலும் அச்சு முறியும் அதுவே அளவில் மிகுந்தால்.



மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.



மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.



மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.


With peacock feathers light, you load the wain;
Yet, heaped too high, the axle snaps in twain.


The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.



peelipey saakaatum achchiRum appaNtanhj
saala mikuththup peyin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செயலின் வலிமை சுயம் மற்றும் துணையானவர்களின் வலிமை எதிரியின் வலிமை அறிந்து எது வேண்டாதது அதை விலக்கி செயல்பட சாதிக்க முடியாதது இல்லை. இளகுவானதாக இருப்பினும் அளவில் அதிகமான பாரம் கூடும். எனவை அளவறிந்து வாழ வேண்டும். வரவு குறைந்ததாக இருப்பினும் செலவு மிகாமல் இருக்க வேண்டும். தன்னிடம் உள்ளதைக் அறிந்து வாழ வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.