திருவள்ளுவரின் திருக்குறள்

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.



அரிதானவைகளில் அரிதானது பெரியவர்களை மதித்துக் காத்து உறவுக் கொண்டாடுவது.


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறம் அறிந்த அநுபவம் பெற்ற அறிவாளியை, தன் நோய் போக்கி அடுத்தவர் நோய் போக்க வல்லவரை நட்பு பாராட்டும் திறன் அறிந்து நட்பாக்கிக் கொள்ளவேண்டும். அவர்களை தவறை தண்டிக்கும் இடிப்பாரையாகவும் தகுந்தபடி பாதுகாக்கும் மதிலாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். பகை வளர்க்கும் பலர் உறவை நாடுவதைவிட நல்லார் தொடர்பை கைவிடாமல் இருப்பதே நல்லது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.