திருவள்ளுவரின் திருக்குறள்

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.



பயப்பட வேண்டியதற்கு பயம் இல்லாது இருப்பது அறியாமை பயப்பட வேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகளின் தொழில்.



அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.



பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.



அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.


Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part.


Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.



anjuva thanjaamai paedhaimai anjuvadhu
anjal aRivaar thozhil


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பகைவரால் கொள்ளை கொள்ள முடியாத அழிவையும் காக்கும் கருவியான அறிவு நன்றியுணர்வைத் தரும். யார் எதைப் பேச கேட்பினும் உண்மைப் பொருளை உணர்வதே அறிவு. உலகத்தில் ஒட்டி வாழ்ந்தாலும் உண்மைத் தன்மையுடன் இருப்பதே அறிவு. நடுக்கமோ, பயமோ, அஞ்சுவதோ இல்லாமல் தேவையான எல்லாம் உடையவரே அறிவுடைவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.