திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கேள்வி / Hearing   

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.



நுட்பமானதை கேட்டு அறியாதவர் பணிவானவராக இருத்தல் அரிது



நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.



நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.



தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.


'Tis hard for mouth to utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard.


It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.



nuNangiya kaeLviya rallaar vaNangiya
vaayina raadhal aridhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உயர் ஞானம் எனப்படும் நாத அனுபவத்தை செவி தருவதால் அச் செல்வம் செல்வத்திற்கெல்லாம் முதன்மையானது. நாத ஒலி குறைந்தால் வயிற்றுக்கு உணவு தர வேண்டும். செவியின் சுவை உணர்ந்தவரே ஆன்றோர். அவர்கள் பிழைப்புக்காக முட்டாள்தனமான செயல்கள் செய்வதில்லை. நாத அனுபவம் அற்றவர் பணிவாக நடப்பதில்லை. செவியின் சுவையை உணராமல் வாய்ச் சுவைக்கே முன்னுரிமைத் தரும் மனிடப் பதர்கள் வாழ்வதும் சாவதும் ஒன்றே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.