பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: இல்வாழ்க்கை / Domestic Life
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
குடும்பம் நடத்தும் ஒருவன் இயல்பாக மாறிய முவருக்கும் நல்லது செய்யும் துணை.
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
The men of household virtue, firm in way of good, sustain
The other orders three that rule professed maintain
He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in
ilvaazhvaan enpaan iyalputaiya moovarkkum
nallaatrin nindra thuNai
உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பெருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு மெற்கொண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தேம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல் வாழ்வின் சிறப்பு கூறுகள். எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். குடுப்பத்திலிந்து கற்க முடியதவர் துறப்பதால் எதையும் கற்க முடியாது. இல்வாழ்வு போன்ற சிறந்த நோன்பு இல்லை. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம்.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.