திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கல்வி / Learning   

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.



கேட்டை விளைவிக்காத விரும்பும் செல்வம் கல்வி அது ஒருவருக்கு பணத்தைப் போன்றது அல்லாமல் வேறொன்று இல்லை.



ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.



கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.



கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.


Learning is excellence of wealth that none destroy;
To man nought else affords reality of joy.


Learning is the true imperishable riches; all other things are not riches.



kaetil vizhuchchelvam kalvi yoruvaRku
maadalla matrai yavai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கல்வி கசடு என்ற கருத்து பேதத்தை உருவாக்கும் என்பதால் கசடற கற்பது அவசியம். எண்ணும் எழுத்துமான கல்வியே உலகை உணர்த்தும் கண்கள். கற்காமல் யாரும் இருக்க முடியாது கல்வியின் பொருட்டு இன்பம் அடைந்தவர் அடுத்தவரும் இதை அடைய ஆசைபாடுவார். கேடு விளைவிக்காத கல்வியே சிறந்த செல்வமாகும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.