திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இறைமாட்சி / The Greatness of a King   

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.



தானம் செய்தல், (இலவசமாக கொடுத்தல் - விலை இல்லாத பொருள்கள் கொடுத்தல்) அடுத்தவர் கருத்துக்கு வாய்ப்பு அளித்தால், சிறந்த அரசாட்சி, மக்களை காத்தல் இந்த நான்கும் உடையவரே ஆட்சியாளர்களில் வெளிச்சமானவர்கள்.



கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.



தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.



நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.


Gifts, grace, right sceptre, care of people's weal;
These four a light of dreaded kings reveal.


He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.



kodaiyaLi sengoal kudiyoampal naankum
udaiyaanaam vaendhark koLi


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஆட்சி என்பது ஆற்றல் பொருந்தி இருக்க ஆறு அங்கங்கள் உடையதாக இருக்க வேண்டும். நன்கு திட்டம் செய்து யாவரும் நன்மை அடைய வழி அமைக்க செய்வதை இங்கே தெளிவு செய்கிறார் வள்ளுவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.