திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஊழ் / Fate   

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.



உலகத்தின் இயற்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.