பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: மெய்யுணர்தல் / Truth-Conciousness
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
நிலைத்த பொருளாக இல்லாததை யெல்லாம் நிலைக்கும் பொருள் என்று உணர்வது மாறுபாடுடைய சிறப்பற்ற பிறப்பு.
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
Of things devoid of truth as real things men deem;-
Cause of degraded birth the fond delusive dream!.
Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.
poruLalla vatraip poruLendru uNarum
maruLaanaam maaNaap piRappu
உண்மை பொருள் எது என அறியாமல் உலகில் உள்ளவற்றை எல்லாம் பொருள் என எண்ணவதே இழிவானப் பிற்ப்பு. மாசு இல்லா காட்சியே இருளை நீக்கும். காட்சி அறியும் கண்களும் பயன் அற்றது உண்மை அறியாவிடின். மெய்பெபொருள் காணும் அறிவே அறிவு. பெயருக்கு கேடு உண்டாக்கும் காமம் வெகுளி மயக்கம் அழித்தால் நோய் இல்லை.
திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.