திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: நிலையாமை / Instability
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.