திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: கொல்லாமை / Not killing
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.