திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கொல்லாமை / Not killing   

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.



நல்வழி என்பது எது என்றால் எந்த ஒன்றையும் கொல்லாமை வேண்டும் என்ற ஒழுக்கம்.



நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.



நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.



எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.


You ask, What is the good and perfect way?
'Tis path of him who studies nought to slay.


Good path is that which considers how it may avoid killing any creature.



nallaaRu enappatuvadhu yaadhenin yaadhondrum
kollaamai soozhum neRi


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறமான செயல் என்பது அழிக்காமல் இருப்பதே இதனால் மற்ற அறச்செயல்கள் தானாக வரம்படும். எல்லா உயிர்களுடன் பகுத்து உண்பதே நூல் தரும் கருத்துக்களில் எல்லாம் தலைச் சிறந்தது. தேவையின்றி அழிப்பவன் தலை இல்லாத முண்டம் போன்றவன்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.