திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இன்னாசெய்யாமை / Not doing Evil   

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.



துன்பம் எதுவென்று நாம் உணர்ந்ததை அடுத்தவருக்கு செய்யாமல் இருக்க வேண்டும்.



ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.



தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.



ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.


What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain.


Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.



innaa enaththaan uNarndhavai thunnaamai
vaeNdum piRan-kaN seyal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சிறப்பு தரும் பொருள் இருப்பினும் அடுத்தவருக்கு துன்பம் தராதவரே குற்றமற்றவர். துன்பம் தந்தவரையும் தண்டிக்காதவர் தூய்மையானவர். துன்பம் தந்தவருக்கும் நன்மை செய்வதே நல்லது அதுவே தண்டிக்கும் வழி. பிறருக்கு நோய் என்ற தீங்கு செய்வதே தனக்குத் தனே செய்வது எனவே, நாம் முற்பகல் செய்யும் தீங்கு பிற்பகல் வந்து சேரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.