திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கூடாவொழுக்கம் / Imposture

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.



நெஞ்சத்தில் தேவைகளை அகற்றாமல் தேவை அற்றவர்போல் சூழ்ச்சி செய்து வாழ்பவரை விட வன்மையானவர்கள் இல்லை.


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வஞ்சகத்தாரைக் கண்டு பூதங்கள் ஐந்தும் எள்ளி நகையாடும். வான் அளவு வளர்ந்தாலும் தன் நெஞ்சம் குற்ற உணர்வுடன் இருந்தால் என்ன பயன். ஆசை தீர்ந்தவர் போல் நடிப்பவரும், தேவைகள் அற்றவர் போல் வேடம் அணிந்தவரும் திருட்டுத் தனமாக வேடனைப் போல் மறைந்த தன் வேட்கையை தீர்த்துக் கொள்வார்கள். முரன்பட்ட யாழ் போல் ஒருவர் தோன்றம் அளித்தாலும் அதன் இசைப் போல் மனதால் இருக்கக்கூடும். உலகம் பழிக்கதபடி வாழ்பவர் அடுத்தவர் மதிக்க வேண்டும் என்று மொட்டையோ, தாடியோ வைத்துக் கொள்ளத் தேவையில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.